Australian Consulate-General
Chennai, India

Media release

28 October 2015                                                                                                                                                                           PA-CN/10/03

 

ஆஸ்திரேலியாவின் உலக இசைக் கருவியாளர்களின் குழு சென்னையை புயலென ஆட்கொண்டது

ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவுக்கும் இடையே வளர்ந்து வரும் கலாச்சார பரிமாற்ற ஈடுபாட்டினை குறிக்கும் வகையில் இசை மேதை ஜுபின் மேத்தா அவர்களின் தலைமையில் சர்வ தேச புகழ் பெற்ற ஆஸ்திரேலிய உலக இசைக் கருவியாளர்களின் குழு இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்ததை ஆஸ்திரேலியாவின் வர்த்தகம் மற்றும் முதலீடு அமைச்சர் ஆண்ட்ரு ரோப் வரவேற்றார்.
திரு ரோப் "பெரும் புகழ் வாய்ந்த ஜுபின் மேத்தா அவர்களின் தலைமையில் ஆஸ்திரேலியாவின் உலக இசைக் கருவியாளர்கள் குழுவின் மிக நேர்த்தியான நிகழ்ச்சியை சென்னையில் நேரில் கேட்டு ரசித்ததில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறினார். "முற்றிலும் உலகத் தரம் வாய்ந்த ஆஸ்திரேலியாவின் கலாச்சார ஆக்கப் பொருள்கள்களின் தரத்திற்கு ஆஸ்திரேலியாவின் இசைக் கருவியாளர்களின் குழு ஒரு எடுத்துக் காட்டாகும்" என்றும் அவர் கூறினார்.
“இது ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே கலைகள் மற்றும் கலாசார பரிமாற்ற ஈடுபாட்டினை ஊக்குவிப்பதற்காக 2014ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் திட்டமிடப்பட்ட பல் வேறு கலாச்சார செயல்பாடுகளில் ஒன்றாகும்” என்றும் திரு ரோப் கூறினார்.
ஆஸ்திரேலிய உலக இசைக் கருவியாளர்களின் குழு 2011ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்பொழுது, சுமார் பாதி இசைக் கருவியாளர்கள் அயல் நாடுகளில் வசிக்கின்றனர். அங்கு அவர்கள் பெர்லின், வியன்னா மற்றும் இஸ்ரேல் இசைக் கருவியாளர்கள் குழுக்கள், ஆம்ஸ்டர்டாம் ராயல் கான்செர்க்பூ மற்றும் சிகாகோ மற்றும் லண்டன் பல்லியல் இசைக் கருவியாளர்களின் குழு போன்ற உலகத்தின் சிறந்த இசைக் கருவியாளர்களின் குழுக்கள் சிலவற்றில் முதன்மைப் பொறுப்புகளில் இருக்கின்றனர்.

ஆஸ்திரேலிய இசைக் கருவியாளர்கள் குழுவுடன் 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தம் நிகழ்ச்சிகளை வழங்கிய சிறந்த இந்திய இசைக் குழு இயக்குனர் ஜுபின் மேத்தா, அக் குழுவினருக்கு இந்தியாவில் இசைச் சுற்றுப் பயணம் செய்யுமாறு அழைப்பு விடுத்தார். இந்த இசைச் சுற்றுப் பயணத்தைப் பற்றி இசை மேதை மேத்தா "ஆஸ்திரேலிய உலக இசைக் கருவியாளர்களின் குழுவை 2013ம் ஆண்டு சிட்னி மற்றும் மெல்பர்ன் நகரங்களில் இயக்கியது எனக்கு ஒரு மாபெரும் கலை அனுபவமாக இருந்தது. ஆகையினால், உலகத்தின் தலைச் சிறந்த குழுக்களில் ஒன்றாக நான் கருதும் இந்தக் குழுவை அக்டோபர் 2015ல் என் நாட்டிற்கு வருமாறு நான் மிகப் பெரும் மகிழ்ச்சியுடன்அழைப்பு விடுத்துள்ளேன்" என்று கூறினார்.

இசை மேதை மேத்தாவினால் இயக்கப்பட்டு சென்னையில் நடைப் பெற்ற இசை நிகழ்ச்சியில் மொசார்ட், ரோச்சினி மற்றும் ப்ராம்ஸ் போன்ற மேதைகளின் இசைகள் இடம் பெற்றன. ஆஸ்திரேலியாவின் உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வல்லுநர் சர் டொனல்ட் பிரட்மன் அவர்களின் பேத்தியும் உச்சக் குரலிசைப் பாடகியுமான கிரேடா பிரட்மன் அவர்களின் சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சியும் இடம் பெற்றது.
ஆஸ்திரேலியாவின் உலக இசைக் கருவியாளர்கள் குழுவின் சென்னை இசை நிகழ்ச்சிக்கு சென்னையின் பதினொன்று முன்னணி வர்த்தக நிறுவனங்கள் அடங்கிய குழுமம் ஒன்று ஆதரவாளர்களாக செயல் பட்டது. " சம காலத்தைச் சார்ந்ததும் துடிப்பானதும் மற்றும் பல் வகையுமான ஆஸ்திரேலியாவின் கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதற்கு சென்னையின் வர்த்தக சமூகம் அளித்த மகத்தான ஆதரவு பற்றி நான் மிகவும் நன்றி உடையவனாக உள்ளேன் " என்று திரு ரோப் கூறினார்.

 

28 October 2015                                                                                                                                                                           PA-CN/10/01
 

ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீடு துறை அமைச்சர் புதிய முயற்சி கூட்டாண்மைகளுக்கு நிறைய ஆற்றல் வளம் இருப்பதாக தெரிவித்தல்
 

சென்னையில் \'ஐ ஐ டி மதராஸ் ரிசர்ச் பார்க்\' க்கு வருகை தந்த ஆஸ்திரேலியாவின் வர்த்தகம் மற்றும் முதலீடு அமைச்சர் ஆன்ட்ரு ரோப் அவர்கள் பொருளாதார வளர்ச்சிக்கும் புதிய தொழில்களின் அபிவிருத்திக்கும் புது முயற்சிகளின் முக்கியத்துவத்தைப் பற்றி வலியுறுத்தினார்.

புதிய முயற்சிகளை பொறுத்த மட்டில், ஆஸ்திரேலியாவிற்கு பெருமைக்குரிய இடம் உண்டு. நுண்ணிய ஒலி அலைகள் மூலம் படம் பிடிக்கும் கருவி (அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர்), விமானத்தின் போக்கை பதிவு செய்யும் கறுப்புப் பெட்டி, கோச்லியர் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட உயிர் மின்னணுவியல் காது (கோச்லியர் பயோனிக் காது) மற்றும் கம்பி இல்லா வலைத்தள தொடர்பு (வைபை) போன்ற வாழ்கையின் போக்கையே மாற்றி அமைக்க வல்ல பற்பல தொழில் நுட்பங்கள் ஆஸ்திரேலியாவில்தான் தொடங்கப் பெற்றன.
புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் சூழ்நிலைகளை உருவாக்கும் தேவை பற்றியும் இதில் அரசாங்கம் வகிக்க வேண்டிய பொறுப்பைப் பற்றியும் திரு ரோப் முக்கியமாக குறிப்பிட்டார். மேலும், ஐ ஐ டி மதராஸ் ரிசர்ச் பார்க் போன்ற நிறுவனங்கள் புது முயற்சிகளை ஊக்குவிப்பதற்கு மிகவும் முக்கியம் என்பதையும் குறிப்பிட்டார்.

“ஐ ஐ டி மதராஸ் ரிசர்ச் பார்க்கில் நான் கண்ட அடைக்காக்கும் சாதனங்களில் தொழில் துறையின் சேர்க்கையின் மூலம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையை ஆராய்ச்சிக் கட்டத்திலிருந்து வணிகமயமாக்குதல் கட்டத்திற்கு எடுத்துச் செல்வது புதிய முயற்சிகளின் வெற்றிக்கு அடிப்படையாகும்” என்று திரு ரோப் மேலும் கூறினார்.
ஆஸ்திரேலிய -இந்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இடையே இணைந்து செயலாற்றுதல் மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி திரு ரோப் பேசினார். " இந்தியாவிற்கு தேவையான உடல்நல பராமரிப்பு, மருத்துவம் மற்றும் மேம்பட்ட உற்பத்தி போன்ற துறைகளில் ஆஸ்திரேலியாவின் ஆராய்ச்சி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் தங்களுடைய ஆராய்ச்சிப் பணிகளில் முன்னிலையில் இருக்கின்றன."
ஐ ஐ டி மதராஸ் மட்டுமே ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழகங்களுடன் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உடையது. மெல்பர்ன் பல்கலை கழகத்துடன் இணைந்து 3 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் மதிப்புடைய மெல்பர்ன் - இந்திய முதுகலை திட்டமும் இதில் அடக்கம். "ஐ ஐ டி மதராஸ் போன்ற இந்திய நிறுவனங்களுடன் எங்களுடைய தொடர்புகளை நாங்கள் மதிக்கிறோம். மேலும், எதிர் காலத்தில் இத்தகைய கூட்டாண்மைகள் ஏற்படுவதையும் விரும்புகிறோம்."
ஆஸ்திரேலிய - இந்திய மூலோபாய ஆராய்ச்சி நிதி (ஆஸ்திரேலிய-இந்திய ச்டிரடேஜிக் பண்டு ) அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உயிரித் தொழில்நுட்பம் (பயோ டெக்னாலஜி) ஆகியத் துறைகளில் இணைந்து ஆராய்ச்சி செய்வதை வலியுறுத்துகிறது. இது ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஆராய்ச்சி கூட்டாண்மைகளை ஊக்குவிப்பதற்காக ஆஸ்திரேலிய அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்பின் முக்கிய அங்கமாகும்.